விளையாட்டு

“எந்தவொரு பேட்ஸ்மேனும் ஷார்ட் பாலுக்கு முன்கூட்டியே தயாராக இருக்க முடியாது” - கவாஸ்கர்

“எந்தவொரு பேட்ஸ்மேனும் ஷார்ட் பாலுக்கு முன்கூட்டியே தயாராக இருக்க முடியாது” - கவாஸ்கர்

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

“இந்திய பவுலர்கள் பவுன்சர்களை நான் பேட் செய்யும் போது வீச வேண்டாம் என அன்போடு சொல்லிக் கொள்கிறேன். ஏன் என்றால் நான் ஷார்ட் பாலை எதிர்பார்த்து தாயாராக கிரீஸில் நின்று கொண்டிருப்பேன். தவறுதலாக ஷார்ட் பால் வீசினால் அது ஆஸ்திரேலிய அணிக்கு தான் ஆதாயமாக அமையும். ஷார்ட் பால் வீசி என்னை வீழ்த்தவே முடியாது” என அண்மையில் சொல்லியிருந்தார் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். 

இதற்கு தனது பாணியில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்…

“முதலில் எந்தவொரு பேட்ஸ்மேனும் ஷார்ட் பாலுக்கு முன்கூட்டியே தயாராக இருக்க முடியாது. டாப் கிளாஸ் பேட்ஸ்மேனையும் ஆட்டம் காண செய்கின்ற பந்துவீச்சாளர்களின் ஆஸ்தான அஸ்திரம் தான் ஷார்ட் பால். அதனால் ஷார்ட் பாலை எதிர் கொள்ள எந்தவொரு பேட்ஸ்மேனும் தயாராக இருக்க முடியாது. 

எனக்கு தெரிந்து இந்திய அணி சார்பில் முகமது ஷமி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனை துல்லிய பவுன்சர் வீசி மிரட்டுவார் என எதிர்ப்பார்க்கிறேன். அவரது உயரத்தில் இருக்கும் பவுலர் ஷார்ட் பால் வீசினால் அது தலைக்கும், தோள்பட்டைக்கும் இடையே செல்லும். அப்படி சென்றால் அது பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுக்கும். ஷமி நல்ல லைனில் பந்துவீசினால் இழப்பு ஆஸ்திரேலியாவுக்கு தான்” என கவாஸ்கர் சொல்லியுள்ளார்.