விளையாட்டு

17 ஆண்டுகளில் முதல்முறை... சாம்பியன்ஸ் லீக்கில் குரூப் சுற்றோடு வெளியேறிய பார்சிலோனா

17 ஆண்டுகளில் முதல்முறை... சாம்பியன்ஸ் லீக்கில் குரூப் சுற்றோடு வெளியேறிய பார்சிலோனா

EllusamyKarthik

சாம்பியன்ஸ் லீக்கில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் குரூப் சுற்றுடன் வெளியேறி உள்ளது ஸ்பெயின் நாட்டின் கால்பந்தாட்ட கிளப் அணியான பார்சிலோனா. 17 ஆண்டுகால சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் முதல் முறையாக பார்சிலோனா குரூப் சுற்றுடன் வெளியேறி உள்ளது. 

ஐந்து முறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்ற அணி, குரூப் சுற்றோடு வெளியேறி உள்ளது அந்த அணியின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2004 - 05 சீசன் முதல் பார்சிலோனா அணி தொடர்ச்சியாக நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 16’ விளையாடி வருகிறது. நடப்பு 2021-22 சீசனில்தான் நாக்-அவுட் வாய்ப்பை இழந்துள்ளது அந்த அணி. 

இந்த 2004 சீசன் முதல் கடந்த சீசன் வரை மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். அவர் நடப்பு சீசனில் PSG அணிக்காக விளையாடி வருகிறார். Bayern Munich கால்பந்தாட்ட அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 0 - 3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்ததன் மூலம் குரூப் சுற்றுடன் வெளியேறி உள்ளது பார்சிலோனா. நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 1 டிரா, 3 தோல்வி அடைந்துள்ளது பார்சிலோனா.