விளையாட்டு

ஏகப்பட்ட பிரஷரில் ரோகித்: வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது போட்டியில் இந்தியாவின் திட்டம்?

ஏகப்பட்ட பிரஷரில் ரோகித்: வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது போட்டியில் இந்தியாவின் திட்டம்?

JustinDurai

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி மிர்பூர் தேசிய அரங்கில் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சரியாக செயல்படாமல் கோட்டை விட்டதே தோல்வி அடைய காரணமாக அமைந்தது. கேஎல் ராகுல் (73 ரன், 70 பந்து) மட்டும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். எனவே இன்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்று அசத்த வேண்டியது மிகவும் கட்டாயமாகும்.

இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றி உத்வேகத்துடன் இருக்கும் வங்கதேச அணி இன்றைய போட்டியிலும் வெற்றிக்கனியை பறிக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. இந்திய அணியில் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் வகையில் இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, ரஜத் பத்திதர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

தவற விடாதீர்: மீண்டும் மீண்டும் மோசமான தோல்வி - இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள 5 முக்கிய பிரச்னைகள்!