விளையாட்டு

சவாலாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் : பங்களாதேஷ் 262 ரன்கள் சேர்ப்பு

webteam

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பங்களாதேஷ் அணி 262 ரன்கள் எடுத்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 31வது லீக் போட்டி இன்று பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணியில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லிடான் தாஸ் 16 (17) ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் பின்னர் வந்த ஷகிப் உல் ஹாசனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஸ்கோரை உயர்த்திய நிலையில், 36 (53) ரன்களில் தமிம் அவுட் ஆகினார். பின்னர் வந்த ரஹிம், ஷகிப்புடன் இணைந்தார். அரை சதம் போட்ட ஷகிப் 51 (69) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய ரஹிம் 83 (87) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு பங்களாதேஷ் அணி 262 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் முஜீப் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் நைப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.