விளையாட்டு

ரசிகருக்கு அடி, உதை: கிரிக்கெட் வீரருக்கு தடை?

ரசிகருக்கு அடி, உதை: கிரிக்கெட் வீரருக்கு தடை?

webteam

ரசிகரைத் தேடிச் சென்று தாக்கிய விவகாரத்தில் சில ஆட்டங்களில் ஆட கிரிக்கெட் வீரருக்கு தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பங்களாதேஷ் கிரிக்கெட் வீர்ர் சபீர் ரஹ்மான். அந்நாட்டு அணிக்காக, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த உள் நாட்டு லீக் போட்டியில் ராஜ்ஷாஹி டிவிசனுக்காக ஆடினார். அப்போது போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர் கத்திக்கொண்டிருந்தார்.

கடுப்பான சபீர், நடுவரிடம் அனுமதி வாங்கிவிட்டு மைதானத்தை விட்டு வெளியே சென்றார். அந்த ரசிகரைத் தேடி பிடித்து தாக்கினாராம். இதை மூன்றாவது நடுவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்தப் பிரச்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் சில போட்டிகளில் ஆட அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் அபாரதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சபீர் ஏற்கனவே இது போன்ற சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.