விளையாட்டு

இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடை நீக்கம் - மகிழ்ச்சியில் கால்பந்து ரசிகர்கள் 

இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடை நீக்கம் - மகிழ்ச்சியில் கால்பந்து ரசிகர்கள் 

kaleelrahman

இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீது விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி பிஃபா உத்தரவிட்டுள்ளது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பில் தேர்த்ல் நடைபெறாமல் இருப்பதாகவும், பதவிக்காலம் முடிந்த பின்பும் தலைமை பொறுப்பில் பிரஃபுல் படேல் தொடர்கிறார் என இந்திய கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்க குழு அமைத்து உத்தரவிட்டது. இதையடுத்து உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இந்தநிலை தொடர்ந்தால் மூன்றாம் நபர்கள் தலையீடு என உரிமம் இடைநீக்கம் செய்யப்படும் என பிஃபா எச்சரித்திருந்தது.

ஆனால் தொடர்ந்து தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததால் இந்திய கால்பந்து கூட்டமைப்பை இடைநீக்கம் செய்து பிஃபா உத்தரவிட்டது. இதனால் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவிருந்த 17 வயதிற்குட்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று (வெள்ளிக் கிழமை) கூடிய உலக கால்பந்து நிர்வாக குழு இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீது விதித்துள்ள தடையை நீக்கியது. இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் 17 வயதிற்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. பிஃபாவின் இந்த முடிவால் இந்திய கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.