விளையாட்டு

52 பந்தில் 85 ரன்: பாபர் மிரட்டல், பணிந்தது உலக லெவன்!

webteam

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் உலக லெவன் அணி தோல்வியடைந்தது.

பாப் டு பிளிசிஸ் தலைமையிலான உலக லெவன் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதலாவது போட்டி பலத்த பாதுகாப்புக்கு இடையே லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற உலக லெவன் அணி, பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் வீரர்கள் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 52 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து அசத்தினார். 

பின்னர் களமிறங்கிய உலக லெவன் அணியால், 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் பிளிசிஸ், டேரன் சமி தலா 29 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
தோல்வி பற்றி உலக லெவன் அணி கேப்டன் பாப் டு பிளிசிஸ் கூறும்போது, ’இது சிறந்த போட்டியாக இருந்தது. பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் பந்துவீச்சில் அதிக வெரைட்டி இருந்தது’ என்றார்.