குறைந்த இன்னிங்ஸில் 11 சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம்.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையி லான 2-வது ஒருநாள் போட்டி, கராச்சியில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி, 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசம் 115 ரன்கள் விளாசினார். இது அவருக்கு 11 வது சதம். இதன்மூலம் குறைந்த இன்னிங்ஸில் 11 சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் கோலியை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை அவர் பிடித்துள்ளார்.
விராத் கோலி, தனது 11-வது சதத்தை 82 வது இன்னிங்ஸில் அடித்திருந்தார். முதலில் இடத்தில் ஹாசிம் அம்லாவும் (64 இன்னிங்ஸ்), 2-ஆம் இடத்தில் குயின்டன் டி காக்கும் (65 இன்னிங்ஸ்) உள்ளனர்.