விளையாட்டு

கிரிக்கெட் தெரியாதவர்கள் எல்லாம் உறுப்பினர்கள்: முகமது அசாருதின் சாடல்!

கிரிக்கெட் தெரியாதவர்கள் எல்லாம் உறுப்பினர்கள்: முகமது அசாருதின் சாடல்!

webteam

கிரிக்கெட் பேட்டையும் பந்தையும் பார்த்திருக்காதவர்கள் எல்லாம் கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னா கேப்டன் முகமது அசாருதின் கூறினார்.

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்று காலை நடந்தது. இதில் கலந்துகொள்ள முகமது அசாரூதின் சென்றார். ஆனால், அவரைக் கூட்ட அரங்குக்குள் அனுமதிக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காக்க வைக்கப்பட்டார். 

இதுபற்றி அசாருதினிடம் கேட்டபோது, ‘இந்த சங்கத்தின் நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறேன். லட்சக்கணக்காக பணம் கொடுத்தால்தான் விளையாட அனுமதிப்பாக வீரர்கள் புலம்புகிறார்கள். இந்த ஊழல் நிர்வாகத்தை கலைக்க வேண்டும் என்று கூறுவதால் என்னை கூட்டத்துக்கு அனுமதிக்கவில்லை என்று நினைக்கிறேன். இது யாருடைய வீடோ இல்லை. இது 1932-ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிற சங்கம். நான் ஐதராபாத்தை சேர்ந்தவன். இந்திய கிரிக்கெட் அணிக்கு பத்தாண்டுகள் கேப்டனாக இருந்தவன். என்னை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்தது சங்கடமாக இருந்தது. இங்கு நிர்வாகிகளாக இருப்பவர்கள், கிரிக்கெட்டே தெரியாதவர்கள். அவர்கள் வாழ்க்கையில் பேட்டையும் பந்தையும் கையால் தொட்டிருக்கவே மாட்டார்கள்’ என்று ஆவேசமாகக் கூறினார்.