விளையாட்டு

"சொந்த நாட்டுக்கு செல்ல ஆஸி., அரசு தனி விமானம் அனுப்ப வேண்டும்" - கிறிஸ் லின்

"சொந்த நாட்டுக்கு செல்ல ஆஸி., அரசு தனி விமானம் அனுப்ப வேண்டும்" - கிறிஸ் லின்

jagadeesh

ஐபிஎல் முடிந்த பின்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை சொந்த நாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்ப தனி விமானம் அனுப்ப வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட சில ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர். ஆனாலும் பல நாட்டு கிரிக்கெட் வீர்ரகள் தொடர்ந்து ஐபிஎல்லில் விளையாடி வருகிறார்கள். இதுவரை இந்திய வீரர் அஷ்வின் உள்பட 5 வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் வீரர் கிறிஸ் லின் "ஐபிஎல் ஒப்பந்தம் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு 10 சதவீதம் வருமானம் கிடைக்கிறது. அதனால் எங்களை பாதுகாப்பாக மீண்டும் ஆஸ்திரேலியா அழைத்து செல்வதற்கு, ஐபிஎல் முடிந்த பின்பு தனி விமானத்தை ஏற்பாடு செய்யலாம். எங்களை விட ஏராளமான மக்கள் நோய் தொற்றால் பாதிக்ப்பட்டு இருக்கிறார்கள் என்று நன்கு அறிவோம்.

"ஆனால் நாங்கள் கடுமையான பயோ பபுள் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். எங்களுக்கு கொரோனா தடுப்பூசியும் அடுத்த வாரம் போடப்பட இருக்கிறது. அதனால் ஆஸ்திரேலிய அரசு நிச்சயம் எங்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யும் என நம்புகிறோம். ஐபிஎல் தொடர் நடுவில் இருந்து வெளியேறுவது எங்கள் எண்ணமில்லை. இதில் ரிஸ்க் இருக்கிறது என்பதை தெரிந்துதான் ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டோம். ஐபிஎல் முடிந்ததும் உடனடியாக சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்புகிறோம்" என்றார் கிறிஸ் லின்.