இந்தியாவுடனான பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விளையாடவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில் வரும் 26 ஆம் தேதி அன்று மெல்பேர்ன் மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்திய கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பியுள்ள நிலையில் ரஹானே கேப்டனாக இந்தியாவை வழிநடத்த உள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான டேவிட் வார்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளடையாடவில்லை என அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் முழுவதுமாக குணமடையாததே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வார்னர் அணியுடன் இப்போதைக்கு இணையவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.
வார்னர் வசித்து வரும் சிட்னி நகரில் கொரோனாவின் தாக்கம் இப்போது அதிகம் உள்ளது இதற்கு காரணம். வரும் ஜனவரி 7 ஆம் தேதி அன்று இந்தியா சிட்னி மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அங்கு கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.