ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டி20 போட்டியில் விளையாடி வருகிறது. கான்பெரா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்துள்ளது.
இந்தியாவுக்காக கே.எல். ராகுலும், தவானும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். மூன்றாவது ஓவரிலேயே ஸ்டார்க் வீசிய பந்தில் க்ளீன் போல்டானார் தவான். தொடர்ந்து களம் இறங்கிய கோலியும் 9 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் மூன்றாவது விக்கெட்டிற்கு சாம்சனும், ராகுலும் 38 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இருப்பினும் அடுத்த 17 பந்தில் வெறும் 6 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. சாம்சன், ராகுல் மற்றும் மணீஷ் பாண்டே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதில் ராகுல் 51 ரன்களை குவித்திருந்தார்.
பத்து ஓவர் முடிவில் 75 ரன்களை 2 விக்கெட் இழப்பிற்கு குவித்திருந்த இந்தியா அடுத்த பத்து ஓவர்களில் 86 ரன்களை குவிக்க ஜடேஜாவின் ஆட்டம் உதவியது.
ஹர்திக் பாண்ட்யாவும் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். ஜடேஜா இறுதி வரை விளையாடி 23 பந்துகளில் 44 ரன்களை குவித்தார். ஹென்ரிக்ஸ் ஆஸ்திரேலியாவிற்காக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 162 ரன்களை விரட்டி வருகிறது.