விளையாட்டு

ராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா

ராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா

webteam

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஷான் மார்ஸ் கடைசியாக சதம் அடித்த 4 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான அலெக்ஸ் கெரெ மற்றும் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதையடுத்து வந்த உஸ்மான் காவாஜா 21 (23) ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். 

ஆனால் விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலைத்து விளையாடிய ஷான் மார்ஸ் 131 (123) ரன்கள் குவித்தார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி இன்று தோற்றுப்போனது. முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா சதம் அடித்தும் இந்தியா தோற்றுப்போனது ஒருபுறம் இருந்தாலும், இன்றைய போட்டியில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. அதாவது, கடைசியாக ஷான் சதம் அடித்த 4 போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியுள்ளது. 

மார்ஸ் கடைசியாக அடித்த நான்கு சதங்களில் ஆஸ்திரேலியாவின் தோல்விகள் :

இங்கிலாந்துக்கு எதிராக 131 ரன்கள் (38 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வி)

இங்கிலாந்துக்கு எதிராக 101 ரன்கள் (6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வி)

தென்னாப்ரிக்காவிற்கு எதிராக 106 ரன்கள் (40 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வி)

இந்தியாவிற்கு எதிராக 131 ரன்கள் (6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வி)

இந்த தோல்விகள் எதார்த்தமானவை என்றாலும், தொடர்ச்சியாக 4 போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்திருப்பதை ‘பேட் லக் ஷான் மார்ஸ்’ என சிலர் இணையத்தில் விமர்சித்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சிறந்த பேட்ஸ்மேன் ஷான் மார்ஸ் என அவரை புகழ்ந்துள்ளது.