விளையாட்டு

தோனி கணிக்க, கோலி சொல்ல... சாஹலின் அட்டாக் ரகசியம்!

தோனி கணிக்க, கோலி சொல்ல... சாஹலின் அட்டாக் ரகசியம்!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் சாஹல். குறுகிய காலத்திலேயே பிரபலமாகிவிட்ட சாஹல், இப்போது இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர். கேப்டன் விராத் கோலியின் நம்பிக்கைக்குரிய வீரராகிவிட்ட சாஹல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் 6 விக்கெட்டும் நியூசிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியவர்.

'தன்னை உற்சாகப்படுத்துவர் கோலிதான்’ என்கிறார் சாஹல். அவர் கூறும்போது, ’அதிக ரன்களை நான் விட்டுக் கொடுத்தாலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் கோலி மகிழ்ச்சி அடைவார். அதே நேரம் டி20 போட்டியில் 4 ஓவர்களில் 35 ரன்களை விட்டுக்கொடுத்தாலும் இரண்டு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் அவருக்குப் போதும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் மேக்ஸ்வெல்லையும் நியூசிலாந்து போட்டியில் வில்லியம்சன், முன்ரோ விக்கெட்டுகளையும் அவர்களின் பேட்டிங்கை கவனித்து எடுத்தேன்.

பயிற்சியாளர்களும் நடுஸ்டம்பை அட்டாக் பண்ணும் விதமாக பந்துவீச உதவினார்கள். களத்துக்குள் என்ன நிலமை என்பதை நன்றாக கவனித்து விடுவார் தோனி. அவர் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை என்னிடம் சொல்வார். அதற்கேற்றபடி பந்துவீசுவேன். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சரியான இடத்தை தேர்வு செய்து பந்துவீசுவேன். அதே நேரம் மெதுவாக வீசினால் பந்து திரும்பாது. அதனால் பேட்ஸ்மேன் குழப்பமடைவார். அது எனக்கு விக்கெட்டாக மாறும். கேப்டன் விராத் கோலி, அட்டாக் பண்ணும் விதமான பந்துவீசுவதையே விரும்புவார். ’அட்டாக் பண்ணு, விக்கெட் எடு’ எனபதுதான் அவரது அறிவுரையாக இருக்கும்’ என்றார்.