விளையாட்டு

ஆசியக் கோப்பை: பாகிஸ்தானை பந்தாடிய இலங்கை

ஆசியக் கோப்பை: பாகிஸ்தானை பந்தாடிய இலங்கை

webteam

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

15-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கெனவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில், இலங்கை அணியுடன் பாகிஸ்தான் பலப்பரீட்சை மேற்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது. இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 பந்துகள் எஞ்சிய நிலையில், அனைத்து விக்கெட்களையும் இழந்த பாகிஸ்தான், 121 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் 30 ரன்கள் சேர்த்தார்.

122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை வீரர்கள், முதல் 2 ஓவரிலேயே 2 விக்கெட்களை பறிகொடுத்தனர். இருப்பினும் பதும் நிசங்காவின் பொறுப்பான ஆட்டத்தால் 17 ஓவரில் இலங்கை அணி 124 ரன்கள் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. பதும் நிசங்கா 48 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். பந்து வீச்சை பொறுத்தவரை, இலங்கை வீரர் ஹசரங்கா 3 விக்கெட்களை கைப்பற்றினார். நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் மீண்டும் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இதையும் படிக்க: களத்தில் மோதலில் ஈடுபட்ட ஆசிப் அலி, ஃபரித் அகமதுவுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!