விளையாட்டு

உலக மன்னிப்பு நாள்: ஹாட்ஜுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்

webteam

விராத் கோலியை விமர்சனம் செய்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜுக்கு இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காகவே தர்மசாலாவில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விராத் கோலி விளையாடவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், குஜராத் லயன்ஸ் அணியின் பயிற்சியாளருமான பிராட் ஹாட்ஜ் விமர்சித்திருந்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்துக்காக ஹாட்ஜ் விராத் கோலியிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.

ஹாட்ஜின் மன்னிப்பு குறித்து அவரது பெயரைக் குறிப்பிடாமல் ட்விட்டரில் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். ஆண்டுதோறும் மார்ச் 30ம் தேதி உலக மன்னிப்பு நாளாக நினைவுகூரப்படும் என்று அஸ்வின், தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.