விளையாட்டு

‘பிட்டாக இருக்கும் வரை விளையாடுவேன் என அன்று சொன்னார் தோனி’ - சஞ்சய் மஞ்ச்ரேகர்

‘பிட்டாக இருக்கும் வரை விளையாடுவேன் என அன்று சொன்னார் தோனி’ - சஞ்சய் மஞ்ச்ரேகர்

EllusamyKarthik

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை அறிவிப்பாரா என கிரிக்கெட் ஆர்வலர்கள் பரவலாக விவாதித்து வருகின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாதது தான் இதற்கு காரணம். 

இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஆரம்பமாவுள்ள ஐ.பி.எல் தொடரில் சென்னன அணியை வழிநடத்த உள்ள தோனி அதற்கான வலை பயிற்சியை துவக்கியுள்ளார். 

‘தோனி எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் அவரது பேட் மூலம் அவரை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் கொடுப்பார்’ என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேகர்.

இந்திய அணியின் கேப்டன் கோலியின் திருமணத்தின்போது தோனி தன்னிடம் பகிர்ந்த தகவல்களை தெரிவித்துள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேகர்.

‘போதுமான உடற்தகுதியோடு தன்னால் வேகமாக ஓடும் வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட நான் தகுதியானவன் என்று கருதுகிறேன்’ என தோனி தன்னிடம் கூறியதாக மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.