விளையாட்டு

ஆஸி. வீரர்களுக்கு பதிலடி கொடுத்த விராத் கோலி

ஆஸி. வீரர்களுக்கு பதிலடி கொடுத்த விராத் கோலி

webteam

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் தன்னை கேலி செய்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் அதே செய்கை மூலமாக பதிலடி கொடுத்தார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் நாளில் பீல்டிங் செய்யும் போது இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், பீல்டிங் செய்யாமல் ஓய்வு எடுத்த கோலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மைதானத்தில் இருந்து இடது தோள்பட்டையில் கை வைத்தபடி கோலி வெளியேறினார். அவருக்கு ஏற்பட்ட காயம் லேசானது என்பதால், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய கோலி களமிறங்கினார். கோலியின் காயத்தைக் கேலி செய்யும் வகையில் மேக்ஸ்வெல் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் சைகை செய்தனர். இந்தநிலையில், நான்காம் ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, புஜாரா மற்றும் சாஹா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 152 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஆஸ்திரேலிய தொடக்கவீரர் வார்னர், ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அப்போது, தோள்பட்டையைப் பிடித்தபடி சைகை செய்து ஆஸ்திரேலிய வீரர்களின் கேலிக்கு, இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி பதிலடி கொடுத்தார்.