சிட்னி டெஸ்டின் கடைசி பந்தை வீசவரும்போது பென் ஸ்டோக்ஸ் தனது முகத்தை மறைத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3-வது டெஸ்ட் போட்டிகளில் வென்று 3-0 என்று முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 294 ரன்களை எடுத்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சில் 122 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
5வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இங்கிலாந்து அணி 102 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்களை எடுத்துபோது, ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால், இந்த போட்டி டிராவில் முடிந்தது. 4ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தையடுத்து 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி ஆஷஸ் கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்டர்சன், இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 103வது முறையாக ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
அதேபோல் சிட்னி டெஸ்டின் கடைசி பந்தை வீசவரும்போது பென் ஸ்டோக்ஸ் தனது முகத்தை மறைத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி பந்தில் பதற்றம் காரணமாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது முகத்தை டி-சர்ட்டால் மறைத்துக்கொண்டார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் கடைசி 12 பந்துகளில் தங்கள் விக்கெட்டைக் பறிகொடுக்காமல் இருந்தனர். கடைசி இரண்டு ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஒரு விக்கெட் தேவைப்பட்ட நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது.