விளையாட்டு

ஒலிம்பிக் 2021: சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா மிமா இட்டோ?

ஒலிம்பிக் 2021: சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா மிமா இட்டோ?

JustinDurai
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவுக்கு சவாலாக விளங்கும் ஒரு ஜப்பான் வீராங்கனையை குறித்த அலசல்..
மிமா இட்டோ. லாவகமாக பந்தை தட்டி, எதிர்த்து போட்டியிடுவரை திக்குமுக்காடச் செய்யும் 20 வயது வீராங்கனை. 15 வயதிலேயே ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியவர். 2016-ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அணிப்பிரிவில் வெண்கலப்பதக்கத்தை வென்றவர். இப்போது சொந்த நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.
20 வயதுக்குள் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கம் என நான்கு பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார் அவர். டேபிள் டென்னிஸ் போட்டிகளில் சீன வீராங்கனைகள் ஆதிக்கம் நிலவி வரும் நிலையில், அவர்களுக்கு அடுத்து அதிக வெற்றிகளை குவித்த வீராங்கனை என்ற சிறப்புடன் இருக்கிறார் மிமா இட்டோ. ஒற்றையர், அணி, கலப்பு இரட்டையர் என மூன்று பிரிவுகளில் தம்திறம்பட்ட ஆட்டத்தை டோக்கியோவில் வெளிப்படுத்த காத்திருக்கிறார் மிமா. ஆச்சர்யங்களை நிகழ்த்தும் ஆற்றல் படைத்தவர் மிமா என்பதற்கு சாட்சி களங்களும் இருக்கின்றன.
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்வீடிஷ் ஓபன் போட்டியில் தரநிலையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள சீனாவின் சு யுலிங், லியு ஷிவென் ஆகியோரை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்று மலைக்க வைத்தார் மிமா. இப்போது ஒலிம்பிக்கிலும் அப்படியொரு ஆச்சர்யத்தை நிகழ்த்தும் முனைப்பில் உள்ளார்