விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்

webteam

உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், 52 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ல் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிதின் ஸாய்ரோவை எதிர்த்து இந்திய வீரர் அமித் பங்கல் களம் கண்டார். உலகக் குத்துச்சண்டை போட்டியில் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே உஸ்பெகிஸ்தான் வீரர் ஆதிக்கம் செலுத்தினார். 

இருப்பினும் சுதாரித்து தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அமித் இறுதி வரை போராடினார். இறுதியில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஷகோபிதின் ஸாய்ரோவ் வெற்றி பெற்றார். இருப்பினும் உலக குத்துச்சண்டை போட்டியின் ஆண்கள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பங்கல் பெற்றார். வராலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ள அமித் பங்கலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.