44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் அமெரிக்கா தொடர்ந்து தடுமாறி வருகிறது.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் சீனா மற்றும் ரஷ்யா அணிகள் பங்கேற்கவில்லை என தெரிவித்தவுடன் அனைவரும் சொன்ன ஒரே பதில் இந்த முறை பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி என்றால் அது அமெரிக்கா என்றுதான். ஆனால் இந்த ஒலிம்பியாட் தொடரில் முதல் மூன்று சுற்றுகளில் அனைத்து வீரர்களும் வெற்றிபெற முடியாமல் தவித்து வந்தாலும் அணி வெற்றிபெற்று வந்த நிலையில் 4வது சுற்றில் அமெரிக்கா - உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்துள்ளது.
குறிப்பாக உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் fabiano Caruana, செஸ் ரேபிட் தொடரின் உலக சாம்பியனாக உள்ள உஸ்பெகிஸ்தான் அணி வீரர் நொடிர்பெக் அப்துசத்தோரோவிடம் தோல்வி அடைந்தார். அதேபோல இந்த தொடரில் தற்போது வரை தன்னுடைய முழு திறமையை வெளிக்காட்ட முடியாமல் தவித்துவரும் லெவோன் அரோனியன இந்த போட்டியிலும் தன்னுடைய போட்டியை டிராவில் முடிக்க அமெரிக்கா அணி உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டிராவில் முடித்துள்ளது.
இதுவரை ஒரு புள்ளியை மட்டுமே அமெரிக்கா அணி இழந்து இருந்தாலும் வீரர்கள் வெற்றி எண்ணிக்கையில் இந்திய B அணியை விட 5 புள்ளிகள் குறைவாக உள்ளது. இது இறுதி சுற்றுகளில் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.