ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 15 வயது வீரர் ஒருவர் ரன் எதுவும் விட்டுக் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். திஷா பயிற்சி மையம் என்ற அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சவுத்ரி, பியர்ல் பயிற்சி மைய அணிக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். தாம் வீசிய நான்கு ஓவர்களையும் மெய்டன்களாக வீசிய ஆகாஷ் சவுத்தி, பத்து பேட்ஸ்மேன்களையும் பெவிலியனுக்கு அனுப்பினார்.