விளையாட்டு

சரிவில் இருந்து மீள்வாரா பி.வி.சிந்து ?

சரிவில் இருந்து மீள்வாரா பி.வி.சிந்து ?

jagadeesh

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், தங்கப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து, அதற்கு பின் ‌நடைபெற்ற தொடர்களில் தோல்வியை சந்தித்து வரு‌வது ரசிகர்களி‌‌‌டையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்துவார் என ‌எதிர்பார்ப்பு, இறகு‌ எப்போதும் இவர் சொல் கேட்கும். மெச்சும்படி விளையாடி உச்சம் தொட்ட வீராங்கனை  என்று போற்றப்படும் பேட்மிண்டன் ராணி பி.வி சிந்து‌, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்‌று அசத்தினார். பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியர் ஒருவர் தங்கம் வென்றது அதுவே முதல் முறையாகும்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் சிந்து விளையாடிய 3 தொடர்களிலும், அவர் காலிறுதிக்கு கூட முன்னேறவில்லை. சீன ஓபன் தொடரில், 2 ஆம் சுற்று போட்டியில் தாய்லாந்தின் PORNPAWEE CHOCHUWONG-கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். அதன்பின் அவர் கொரிய ஓபன் தொடரில் முதல் சுற்றில் கூட வெற்றிப் பெறவில்லை. தரநிலையில் தன்னை விட பின் தங்கிய அமெரிக்காவின் BEIWEN ZHANG கிடம் வீழ்ந்தார். அண்மையில் களம் கண்ட டென்மார்க் ஓபன் தொடரிலும், அவருக்கு தோல்வியே கிட்டியது. இரண்டாம் சுற்றுப் போட்டியில் 17 வயதான தென்கொரிய வீராங்கனையிடம் என்ற நேர் செட்டில் தோல்வி கண்டு தொடரிலிருந்து வெளியேறினார்.

உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு பின், பிவி சிந்துவின் பயிற்சியாளர் கிம் ஜி ஹியூன் சொந்த காரணங்கள் பொருட்டு விலகினார். சிந்துவின் பயிற்சியாளர் ராஜினாமா செய்ததும் அவரின் தொடர் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக ‌பார்க்கப்படுகிறது. என்றாலும்‌, தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு அவர் பட்டங்கள் வென்றதை பேட்மிண்டன் உலகம் ஏற்கெனவே கண்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிக தோல்விகளிலிருந்து அவர் விரைவில் மீள்வார் என்பதில் சந்தேகமில்லை. அதே போல் அடுத்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்ப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.