விளையாட்டு

இந்தியாவில் பயணிப்பது கஷ்டம்: ஆஸி.வீரர் ஜம்பா

இந்தியாவில் பயணிப்பது கஷ்டம்: ஆஸி.வீரர் ஜம்பா

webteam

இந்திய ரசிகர்கள் கிரிக்கெட்டை அதிக நேசிப்பதால் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று ஆஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் ஆதம் ஜம்பா கூறினார்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எளிதில் வென்றது. 3-வது போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது.

கவுகாத்தி போட்டியில் வெற்றி பெற்றதும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சென்ற பஸ்சில் கல்வீச்சு நடந்தது.  மர்ம நபர்கள் சிலர் திடீரென பஸ் மீது கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. வீரர்கள் காயமின்றி தப்பினர். பிறகு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். 
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள, ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் ஆதம் ஜம்பா கூறும்போது, ’கல்வீச்சு நடக்கும்போது, நான் அதற்கு அடுத்த பக்கத்தில் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாடல் கேட்டபடி இருந்தேன். திடீரென்று பயங்கர சத்தம் கேட்டதும் பதறிவிட்டேன். இந்தச் சம்பவம் ஏமாற்றமளிக்கிறது. இந்திய ரசிகர்கள் எப்போதும் மற்ற வீரர்களை மதிப்பவர்கள். அதோடு, அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கிரிக்கெட்டை அதிகம் ரசிப்பதால் இப்படி ஏற்படுகிறது. ஏதோ ஒரு ரசிகரின் செயல் மற்ற ரசிகர்கள் மீதான நல்லெண்ணத்தையும் கெடுத்துவிடுகிறது. இதனால் இந்தியாவில் பயணிப்பது கடினமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.