விளையாட்டு

பந்தை சேதப்படுத்தினாரா? திடீர் சர்ச்சையில் ஆடம் ஜம்பா!

பந்தை சேதப்படுத்தினாரா? திடீர் சர்ச்சையில் ஆடம் ஜம்பா!

webteam

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா, பந்தை சேதப்படுத்தியதாக பரபரப்பு சர்ச்சை எழுந்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் நேற்று மோதின. முதலில் ஆடிய இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்தது. ஷிகர் தவான் 117 ரன்னும் விராத் கோலி 82 ரன்னும் ரோகித் சர்மா 57 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர் முடிவில் 316 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 36 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியின் போது, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 6 ஓவர்களில் 50 ரன்களை கொடுத்தார். அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. இந்த ஆட்டத்தின் போது ஜம்பாவின் சில நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஓவரிலும் பந்து வீசுவதற்கு முன்பாக, அவர் தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டு ஏதோ ஒன்றை எடுத்து பந்தின் மீது வைப்பது போன்று காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. 

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், சுமித், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய பிரச்னையில் சிக்கி, தடையை அனுபவித்த நிலையில், ஜம்பாவின் நடவடிக்கை, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.