விளையாட்டு

'ரிட்டையர்மென்ட்'க்கு குட் பை சொல்லுங்கள் - டிவில்லியர்ஸுக்கு ரவி சாஸ்திரி அழைப்பு

'ரிட்டையர்மென்ட்'க்கு குட் பை சொல்லுங்கள் - டிவில்லியர்ஸுக்கு ரவி சாஸ்திரி அழைப்பு

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வர வேண்டும் என அவருக்கு செல்லமாக அழைப்பு விடுத்துள்ளார். 

நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடும் ஏபிடி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33 பந்துகளில் 73 ரன்களை அடித்திருப்பார். 

அதன் மூலம் பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் சுலபமாக வெற்றியும் பெற்றது.

இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் விளையாட வாருங்கள் என ஏபி டிவில்லியர்ஸுக்கு ரவி சாஸ்திரி அழைப்பு விடுத்துள்ளார். 

“நேற்று நீங்கள் ஆடிய இன்னிங்ஸ் அதிசயமும், அற்புதமும் நிறைந்தது. அதை பார்க்கும் போது இது கனவா, நினைவா என எண்ணத் தூண்டியது. அதனால் உங்கள் ரிட்டெயிர்மென்டுக்கு குட் பை சொல்லிவிட்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுங்கள் ஏபிடி” என ட்வீட்  ரவி சாஸ்திரி. 

கடந்த 2018இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார் டிவில்லியர்ஸ். அப்போதிலிருந்தே அவர் ரிட்டெயிர்மென்டிலிருந்து திரும்பி வர வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து வருகிறது. 

நடப்பு ஐபிஎல் சீசனில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ் 228 ரன்களை குவித்துள்ளார்.