விளையாட்டு

கை குலுக்குவதை தவிர்த்த கேன் வில்லியம்சன் - நகைச்சுவை செய்த ஆரோன் பின்ச் !

கை குலுக்குவதை தவிர்த்த கேன் வில்லியம்சன் - நகைச்சுவை செய்த ஆரோன் பின்ச் !

jagadeesh

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச்சும் கை குலுக்காமல் நகைச்சுவையில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ரசிகர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. உலக புகழ்ப்பெற்ற சிட்னி மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் இந்தப் போட்டி நடைபெறுவதால் கேலரிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அண்மையில் தென் ஆப்பிரிக்காவுடனான தொடரை இழந்த ஆஸ்திரேலியா, இப்போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் அதிரடியாக விளையாடியது. அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களை எடுத்தது. இதனையடுத்து இப்போது நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு இரு அணியின் கேப்டன்கள் டாஸ் போடுவதற்கு வந்தனர். அப்போது ஆரோன் பின்ச் நாணயத்தை சுழற்றினார். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பொதுவாக டாஸ்க்கு பின்பு கேப்டன்கள் கைகுலுக்குவது வழக்கம். அதுபோல கைகுலுக்குவது போல குலுக்கி பின்பு தங்களது கைகளை விலக்கிக்கொண்டு ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் உலக தலைவர்கள் யாரும் ஒருவருக்கொருவர் கைகொடுப்பதில்லை. அதைதான் கேன் வில்லியம்சனும், ஆரோன் பின்ச்சும் பின்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.