விளையாட்டு

இந்த ஸ்பார்க் போதுமா!! ஒரே ஓவரில் 7 சிக்ஸர்.. ஒரே போட்டியில் ருதுராஜ் செய்த சாதனைகள்!

இந்த ஸ்பார்க் போதுமா!! ஒரே ஓவரில் 7 சிக்ஸர்.. ஒரே போட்டியில் ருதுராஜ் செய்த சாதனைகள்!

Rishan Vengai

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் விளாசிய ருதுராஜ் கெயிக்வாட் சாதனை படைத்துள்ளார்.

விஜய் ஹசாரா தொடரில் உத்திர பிரதேசத்திற்கு எதிரான காலியிறுதிப்போட்டியில்தான் இந்த சாதனையை படைத்திருக்கிறார். உத்திரபிரதேச இடது கை ஸ்பின்னரான சிவா சிங் வீசிய 49ஆவது ஓவரில் வீசிய 7 பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி, லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்தார்.

நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த விஜய் ஹசாரே கோப்பை காலியிறுதிப்போட்டிகளை எட்டியுள்ளது, இன்று ஒரே நாளில் 4 காலியிறுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 4 காலியிறுதி ஆட்டங்களில், பஞ்சாப் VS கர்நாடகா, மஹாராஸ்டிரா VS உத்தர் பிரதேஷ், ஜம்மு காஷ்மீர் VS அஸ்ஸாம், சவுராஸ்டிரா VS தமிழ்நாடு முதலிய 8 அணிகள் விளையாடி வருகின்றன.

49ஆவது ஓவரில் 43 ரன்கள்

உத்தரபிரதேசத்திற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த மஹாராஷ்டிரா அணியின் கேப்டன் மற்றும் ஓபனரான ருதுராஜ் ஹெய்க்வாட், கடைசிவரை ஆட்டமிழக்காமல் சதத்தை பதிவு செய்து 147 பந்துகளில் 165* ரன்கள் என்று விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, 49ஆவது ஒவரை வீச வந்த இடது கை பந்துவீச்சாளரான சிவா சிங் வீசி எல்லா பந்துகளையும் எல்லைக்கோட்டிற்கு அப்பால் விளாசிக் கொண்டிருந்தார். இடையில் ஒரு நோ பால் வீசப்பட அந்த பந்தினையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 7 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி, தனது இரட்டை சதத்தை பதிவு செய்து, இதுவரை எந்த வீரரும் அடிக்காத சாதனையை படைத்துள்ளார் ருதுராஜ். மஹாராஸ்டிரா அணியில் ருதுராஜ் மட்டும் 159 பந்துகளில் 220 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் 142 பந்துகளில் 96 ரன்களை சேர்த்துள்ளனர்.

7 பந்துகளில் 7 சிக்சர்கள்

முதல் பந்து- லோ புல் டாஸ் பந்தை லாங் ஆன் மீது சிக்சருக்கு அனுப்பினார்.
2ஆவது பந்து- ஸ்டிரைட் ஆர்க்கில் வீசப்பட்ட பந்தை நேராக தூக்கி அடித்து சிக்சருக்கு அனுப்பினார்
3ஆவது பந்து- ஷார்ட்டாக வீசிய பந்தை ஸ்கொயர்-லெக்சைடில் தூக்கி சிக்சர்
4ஆவது பந்து- அவுட்சைடு ஆஃப் ஸ்டம்பில் வீசிய பந்தை லாங்க் ஆஃப் மீது சிக்சர்
5ஆவது பந்து- அவுட்சைடு ஆஃப் ஸ்டம்பில் லெந்தை மாற்றி வீசியதையும் லாங்க் ஆஃப் மீது சிக்சருக்கு அனுப்பினார் ( நோ-பாலாக அறிவிக்கப்பட்டது)
6ஆவது பந்து- லெக் ஸ்டெம்பில் வீச லாங்க் ஆனில் சிக்சர்
7ஆவது பந்து-ஸ்டிரைக்கை மாற்றி மிடில் ஸ்டம்பில் பந்தை வீச அதையும் சிக்சருக்கு அனுப்பு ஒரே ஓவரில் 7 சிக்சர்கள், 43 ரன்கள் என இரட்டை சாதனைகளை படைத்தார் ருதுராஜ். 9 ஓவர்கள் வீசிய சிவா சிங் 88 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

ரோகித் சர்மா சாதனை சமன்

ஒரு போட்டியில் 16 சிக்சர்கள் அடித்து ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடித்திருந்த சாதனை சமன் செய்துள்ளார் ருதுராஜ்.

ருதுராஜ் 100-150-200

110 பந்துகளில் 100 ரன்கள்
138 பந்துகளில் 150 ரன்கள்
48ஆவது ஓவரில் 147 பந்துகளில் 165* ரன்கள்
50 ஓவர் முடிவில் 159 பந்துகளில் 220 ரன்கள்
கடைசி 12 பந்துகளில் 9 சிக்சர்கள் அடிக்கப்பட்டது.

ஒரே ஓவரில் அதிகபட்ச ரன்கள்

இதுவரை லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் 36 ரன்களாக இருந்தது, அதை முறியடித்து 43 ரன்களை அடித்துள்ளார் ருதுராஜ்.

உத்தரப்பிரதேசத்திற்கு எதிரான இந்தப் போட்டியில் மகாராஷ்டிரா அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 331 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய உத்தரபிரதேச அணி 272 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட 39 ஆவது இரட்டை சதம் இதுவாகும். இந்திய கிரிக்கெட் வீரர் அடிக்க 5 ஆவது பெரிய ஸ்கோர் ஆகும். முதலிடத்தில் 277 ரன்களுடன் ஜெகதீசன் உள்ளார்.

Wow! This is amazing. 7 sixes in an over. This is special talent @Ruutu1331 #RuturajGaikwad #Cricket pic.twitter.com/Cj6JVJxhdg
— Raman Raheja (@ramanraheja) November 28, 2022

இதுவரை 6 பால், 6 சிக்ஸர் மட்டுமே!

இதற்கு முன்பாக சர் கர்பீல்ட் சோபர்ஸ், ரவி சாஸ்திரி, ஹெர்செல்லி கிப்ஸ், யுவராஜ் சிங், ராஸ் விட்டெல்லி, ஹஸ்ட்ரதுல்லா ஸஸாய், கிரென் பொல்லார்டு, திசரா பெராரா ஆகிய வீரர்கள் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் 2007 உலகக்கோப்பையின் போது யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 விளாசியிருக்கிறார். சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர், 5 பவுண்டரிகள் விளாசியிருந்தார். அப்பொழுது ஒரு நோ பால் வீசப்பட்டிருந்தது.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ருதுராஜ் இதுவரை:

இன்னிங்ஸ்: 69
ரன்கள் : 3758
பேட்டிங் சராசரி: 58.71
சதம்(100) : 13
அரைசதம் (50) : 16
அதிகபட்ச ரன்: 220*