விளையாட்டு

தீபிகா பல்லிகலுக்கு 60 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

தீபிகா பல்லிகலுக்கு 60 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

webteam

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருந்த பளுதூக்குதல் வீரர் சதீஷ் குமார் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு ஏற்கனவே பரிசுத் தொகை அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஸ்குவாஷ் போட்டியில் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய இரு பிரிவுகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிகலுக்கு 60 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மகளிர் இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பாவுக்கு 30 லட்சம் ரூபாயும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்ற சவுரவ் கோஷலுக்கு 30 லட்சம் ரூபாயும் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஷரத் கமலும், சத்தியனும் தலா 2 பதக்கங்களை வென்றிருந்தனர். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தலா 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.