இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய முரளி விஜய்-க்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது. லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவுக்கு பதில் முகமது ஷமி அணிக்கு திரும்பியுள்ளார். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தவானும் முரளி விஜய்யும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.
விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 தொடர்களை வென்றுள்ளது. இலங்கை உடனான டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு - பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி கடைசி போட்டியில் டிரா செய்தாலே தொடரை வென்றுவிடும். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பதிவு செய்திருந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் சாதனையை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.