விளையாட்டு

அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற 22 வயது நவோமி ஓசாகா 

அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற 22 வயது நவோமி ஓசாகா 

EllusamyKarthik

அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸை சேர்ந்த வீராங்கனை விக்டோரியா அசரங்காவை வீழ்த்தி பட்டத்தை வென்றுள்ளார் ஜப்பானை சேர்ந்த 22 வயதான நவோமி ஓசாகா.

இரண்டாவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் நவோமி ஒசாகா. கடந்த 2018இல் ஒசாகா அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றிருந்தார். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சர்வதேச ரேங்கிங்கில் 27வது இடத்தில் உள்ள அசரங்காவை வீழ்த்தியுள்ளார் நவோமி. 

ஆட்டத்தின் முதல் செட்டில் 1-6 என பின்தங்கியிருந்த நவோமி தடுமாறி விழுந்தாலும் எழுந்து நின்று வேகமெடுக்கும் புரவி புயலாக உத்வேகம் பெற்று 6-3, 6-3 என லீட் கொடுத்து பட்டத்தை வென்றுள்ளார். 

சுமார் 22 கோடி ரூபாயை வெற்றி பெற்றமைக்காக பரிசு தொகையாக பெற்றுள்ளார் நவோமி.

அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸை அசரங்கா வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.