விளையாட்டு

12 மணி நேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்: வியக்க வைக்கும் மலிங்கா!

12 மணி நேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்: வியக்க வைக்கும் மலிங்கா!

webteam

12 மணி நேரத்தில் 2 நாடுகளில் கிரிக்கெட் விளையாடிய மலிங்கா 10 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இண்டியன்ஸ் அணிகள் நேற்று முன் தினம் இரவு மோதின. இதில் மும்பை அணியில் பங்கேற்ற மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தினார். அன்று இரவு வரை இந்தப் போட்டியில் பங்கேற்ற மலிங்கா, பின்னர், உடனடியாக தனது தாயக மான இலங்கைக்குச் சென்றார். 

அங்கு நேற்று காலை பல்லகெலேவில் நடந்த உள்ளூர் ஒரு போட்டியில் பங்கேற்றார். காலே-கண்டி அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில், காலே அணிக்கு மலிங்கா கேப்டனாக பணியாற்றினார். முதலில் பேட்டிங் செய்து காலே அணி நிர்ணயித்த 256 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய கண்டி அணி 18.5 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது.

காலே கேப்டன் மலிங்கா 9.5 ஓவர்கள் பந்து வீசி 49 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார்.  12 மணி நேர இடைவெளியில் 2 நாட்டில் நடந்த போட்டியில் களம் கண்ட மலிங்கா மொத்தம் 10 விக்கெட்டுகளை சாய்த்து பிரமிக்க வைத்திருக்கிறார்.