இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சரண்ஜித் சிங் மாரடைப்பு ஏற்பட்டு இமாச்சலப் பிரதேசம் உனாவில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார்.
1964ல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 1960 ரோம் ஒலிம்பிக், 1962 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். விளையாட்டுத் துறையில் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், சரண்ஜித் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்தி: `கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் தேர்வுகள் ஆன்லைனில்தான் நடக்கும்’- அமைச்சர் பொன்முடி பேட்டி