youtube channel  facebook
விளையாட்டு

youtube channel தொடங்கி 22 நாட்கள்.. ஆனால்,1 பில்லியன் ஃபாலோயர்கள்.. சாதனையை அடுக்கும் ரொனால்டோ!!

யூடியூப் சேனலைத் தொடங்கி 22 நாட்கள் மட்டும் தான்... 100 கோடி ஃபாலோயர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோனாவின் சமூக வலைத்தள பக்கங்கள்.

PT WEB

யூடியூப் சேனலைத் தொடங்கி 22 நாட்கள் மட்டும் தான்... 100 கோடி ஃபாலோயர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோனாவின் சமூக வலைத்தள பக்கங்கள்.

கால்பந்து களத்தில் சாதனை மேல் சாதனை மேல் படைப்பது அலுத்து விட்டதோ என்னவோ, சமூக வலைத்தளப் பக்கங்களில் சாதனைகளை அடுக்கத் தொடங்கி விட்டார். போர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. யூடியூப் சேனலைத் தொடங்கியது முதல், சமூக வலைத்தளங்களில் அவரை ஃபாலோ செய்வோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

யூடியூப் சேனலைத் தொடங்கிய 90 நிமிடங்களில், 10 லட்சம் பேர் அவரை ஃபாலோ செய்யத் தொடங்கினர். அடுத்ததாக 10 பணி நேரத்தில் ஒரு கோடி பேர் அவரை ஃபாலோ செய்யத் தொடங்கினர். ஒரு வாரத்தில் இது 5 கோடி ஃபாலோயர்களாக உயர்ந்தது.

கிளப் மற்றும் சர்வதேச போட்டிகள் என விளையாடி வரும் ரொனால்டோ, தமது 900-ஆவது கோலை அடித்தார். இந்த சாதனை சொந்த நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் என நாற்திசைகளிலும் வருமானத்தை ஈட்டித் தந்தது. பாட்டில் தண்ணீர் தொடங்கி ஃபிட்னஸ் செயலி, காலணி நிறுவனம், கண்ணாடி தயாரிப்பு என நீண்டு உள்ளாடை நிறுவனம் என சொந்த தொழில் பலவற்றில் கோடி கோடியாய் பணம் குவிக்கிறார் ரொனால்டோ.

போதாக்குறைக்கு தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அவரது வங்கிக்கணக்கில் பணம் கொட்டுகிறது. இன்ஸ்டாகிராமில் ரொனால்டோவின் கணக்கை 64 கோடிக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர்.

பேஸ்புக் பக்கத்தை 17 கோடிக்கும் அதிகமானோரும், அவரது எக்ஸ் வலைத்தளத்தை 11 கோடி மேற்பட்டோரும், சமீபத்தில் தொடங்கப்பட்ட யு டியுப் சேனலை 6 கோடிக்கு மேற்பட்டோரும் ஃபாலோ செய்கின்றனர். ரொனால்டோவின் சீன வலைத்தளங்களான குய்சா மற்றும் வைபோ ஆகியவற்றையும் லட்சகணக்கானோர் ஃபாலோ செய்கின்றனர். உலக மக்கள் தொகையே சுமார் 800 கோடி தான். அதில் ரொனால்டோவின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை மட்டும் 100 கோடி. இது எப்படி!