விளையாட்டு

“313 ரன்கள் எடுத்தாலும், இந்தியாவை வெல்ல சிறந்த பவுலிங் தேவை” - உஸ்மான்

“313 ரன்கள் எடுத்தாலும், இந்தியாவை வெல்ல சிறந்த பவுலிங் தேவை” - உஸ்மான்

webteam

தங்கள் அணி 313 ரன்கள் குவித்தாலும், சிறப்பாக பந்துவீசினால் தான் இந்தியாவை வெற்றி பெற முடியும் என ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் காவஜா தெரித்துள்ளார். 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 313 ரன்கள் குவித்தது. அந்த அணியில் உஸ்மான் காவஜா 104 (113) மற்றும் கேப்டன் ஃபின்ச் 93 (99) ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்  47 (31) ரன்கள் எடுத்தர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் சதம் அடித்தது தொடர்பாக பேசிய உஸ்மான், “நான் அதிகம் யோசிக்காமல், பேட்டிங்க் செய்வதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். ஃபின்ச் சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் நாங்கள் இன்னும் முழு வெற்றி பெறவில்லை. எங்கள் 313 ரன்கள் குவித்துள்ள போதிலும், சிறப்பாக பந்துவீசினால் மட்டுமே இந்திய அணியை வெல்ல முடியும். சதம் அடித்தது எனக்கு மகிழ்ச்சி தான். எதிர்பாராத விதமாக ஃபின்ச் சதம் அடிக்காமல் அவுட் ஆகிவிட்டார். இருந்தாலும், அவரது சிறந்த பேட்டிங் முக்கியமானது. சிறந்த பந்துவீச்சுடன், சிறந்த ஃபீல்டிங்கையும் நாங்கள் செய்ய வேண்டும். 313 என்பது எங்களுக்கு போதுமான ரன்கள் தான்” என்றார். தற்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் என்ற நிலையில் விளையாடி வருகிறது.