விளையாட்டு

என் பவுலிங்ல சிறப்பா ஒண்ணுமில்ல: அடக்கத்தோடு பேசும், சுழல் புயல்!

என் பவுலிங்ல சிறப்பா ஒண்ணுமில்ல: அடக்கத்தோடு பேசும், சுழல் புயல்!

webteam

எனது பந்துவீச்சில் சிறப்பாக எதுவும் இல்லை என்று சுழல்பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்தார்.

பதினோறாவது ஐபிஎல் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கோப்பையை வென் றது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐதராபாத் அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அவரது பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தது. முன்னணி வீரர்களே அவரது பந்தை அடிக்க முடியாமல் திணறி னர். தங்கள் விக்கெட்டுகளையும் இழந்தனர்.

இந்நிலையில் ரஷித்கானுக்கு சிறந்த சியட் ரேட்டிங் அவார்டு நேற்று வழங்கப்பட்டது. மும்பையில் நடந்த விழாவில் ஆஸ்திரேலிய அணியி ன் முன்னாள் வீரர் டாம் மூடியிடம் இருந்து விருதைப் பெற்ற அவர் கூறும்போது, ‘எனது பந்துவீச்சில் சிறப்பாக எதுவும் இல்லை. எனது திற மை மற்றும் நம்பிக்கையில்தான் எல்லாம் இருக்கிறது. அதோடு என் பந்துவீச்சு முறையையும் எனது ஆக்‌ஷனையும் பேட்ஸ் மேன்களால் கணிக்க முடியாது. இதுதான் எனது சிறப்பாக நினைக்கிறேன். அடுத்து இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறோம். இது ஆப்கானிஸ்தானுக்கு முதல் டெஸ்ட் போட்டி. இந்தியாவுடன் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது எல்லோருக்கும் கனவு. எனக்கும் அப்படித்தான். இது எனக்கு பெருமையான தருணம். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கடும் சவால் கொடுப்போம் என்று நம்புகிறேன்’ என்றார்.