100ஆவது சுதந்திர இந்தியாவில் இந்திய கால்பந்து விளையாட்டை உலகத்தரத்திற்கு உயர்த்துவதற்கான ரோட்மேப்பை அகில இந்திய கால்பந்து அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது.
உலகில் அதிக பார்வையாளர்களை கொண்டுள்ள ஒரு விளையாட்டாக கால்பந்து ஆனது, கிரிக்கெட் விளையாட்டுக்கு முன் வரிசையிலே இருந்து வருகிறது. அதற்கு தகுந்த எடுத்துக்காட்டாக, நடந்து முடிந்த 2022 கத்தார் கால்பந்து உலகக்கோப்பையை சொல்லலாம். அதிகளவு இந்திய ரசிகர்ளால், இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. மேலும் பல கால்பந்து ரசிகர்களால் இத்தனை கோடி மக்கள் இருக்கும் நாடு, கால்பந்து தொடரில் பங்கேற்க கூட முடியவில்லையே என்ற வருத்தம் மற்றும் வேதனையையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் அகில இந்திய கால்பந்து அமைப்பான AIFF, 2047ஆம் வருடம் 100ஆவது சுதந்திர இந்தியாவை இலக்காக கொண்டு, டிஜிட்டல் மயமாக இந்திய கால்பந்து விளையாட்டை மாற்றும் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி இரு இலக்குகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி 2036க்குள் ஆசியாவின் முதல் 7 கால்பந்து அணிகளுக்கான வரிசையில் இந்தியாவை கொண்டுவரும் இலக்காகவும், 2047ல் ஆசிய அணிகளில் இந்தியாவை முதல் 3 இடங்களுக்கு கொண்டு செல்லும் இலக்காகவும் வைத்து திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகில இந்திய கால்பந்து அமைப்பு AIFF, தலைவர் கல்யாண் சௌபே மற்றும் பொதுச் செயலாளர் ஷாஜி பிரபாகரன் ஆகியோர் இலக்குக்கான AIFFன் சாலை வரைபடத்தை வெளியிட்டு, “VISION 2047”ஐ முன்வைத்தனர்.
இந்தத் திட்டத்தில் AIFFக்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால பார்வைகள் உள்ளன. 2047 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்தின் நூறாவது ஆண்டைக் குறிக்கும் நிலையில், இந்தியாவில் இந்தியாவை உலகளாவிய வல்லரசாக மாற்றுவதற்கு AIFF திட்டமிட்டுள்ளது. ‘இந்தியாவில் கால்பந்தை நம்பமுடியாததாக ஆக்குவது, கால்பந்தை வெகுஜனங்களுக்கான விளையாட்டாக மாற்றுவது’ என்பதே இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
VISION 2047-ன் முக்கிய அம்சங்கள்,
*இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் கால்பந்தைப் பரப்புவதே இலக்கின் முக்கிய ஒன்றாக இருக்கிறது. கடந்த 125 நாட்களில் இந்தியா முழுவதும் கால்பந்தாட்டம் பற்றிய அறிவைப் பெறுவதற்காக குழு ஒன்று, நாடு முழுவதும் பயணம் செய்துள்ளது.
*இந்தியாவின் கால்பந்தை மேம்படுத்துவதற்கான வழிமுறையாக, உயர் FIFA, AFC மற்றும் SAFF தரவரிசையில் உள்ள நாடுகளுடனான உறவுகள் மேம்படுத்தப்படும்.
* குறுகிய கால திட்டம் - 2026: "அடுத்த 4 ஆண்டுகளில் நாங்கள் எங்கு சென்றடைவோம் என்று நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" - தலைவர் கல்யாண் சௌபே.
*நீண்ட கால திட்டம் - 2047: ”தொலைநோக்கு 2047” - இது இந்தியாவின் சுதந்திரத்தின் 100ஆவது ஆண்டைக் குறிக்கிறது. "25 ஆண்டுகளில், கால்பந்தை இந்தியாவில் நம்பமுடியாத விளையாட்டாக மாற்ற இலக்கு வைத்துள்ளோம்" என்று ஷாஜி பிரபாகரன் கூறினார்.
*இந்த தொலைநோக்கு விஸ்ஸனில் 11 தலைப்புகள் நாங்கள் தயாரித்துள்ளோம். குறுகிய கால பார்வை 2026-ல் முடிவடைகிறது, அதே நேரத்தில் நீண்ட காலம் 2047-ல் முடிவடைகிறது.
அந்த 11 தலைப்புகள் - ”நிர்வாகம், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மாற்றம், நடுவர், கிளப்புகள், பயிற்சியாளர் கல்வி, அடித்தட்டு, சந்தைப்படுத்தல் & வணிகமயமாக்கல், திறமை மேம்பாடு மற்றும் அடையாளம், போட்டிகள், தேசிய அணி”
* “VISION 2047” 6 சுழற்சிகளாக பிரிக்கப்படும்.
* இது எங்களுக்கு ஒரு முக்கியமான ஆண்டு, கால்பந்து பின்தங்கியிருக்கக் கூடாது என்று நாங்கள் உணர்கிறோம், 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நம்பமுடியாத இந்தியா மற்றும் நம்பமுடியாத கால்பந்தைக் காண்போம் என்று நாங்கள் நம்புகிறோம்.
*ஆசியாவின் முதல் 3 லீக்குகளில் இடம்பிடித்து, ஆசியாவின் முதல் 4 அணிகளில் ஒன்றாக ஆவது தான் முதல் இலக்கு. பெண்கள் மற்றும் ஆண்கள் கால்பந்தில் குறைந்தபட்சம் ஒரு நட்சத்திர வீரரை உருவாக்குவது குறிக்கோளாகிறது.
* இந்திய கால்பந்து உலகத்தின் முதல் 11 வீரர்களுக்கான வேட்டை தொடங்கியுள்ளது.
*AIFF இல் 3 வெர்டிக்கிள் இருக்கும்.
*ஆண்கள் கால்பந்திற்கு இணையாக பெண்கள் கால்பந்து நடத்தப்படும்.
*AIFF செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் கொல்கத்தாவில் 1/3ல் நிறைவடைந்தது. நிதி இடைவெளி இந்த ஆண்டு ஈடுசெய்யப்படும் மற்றும் 2026 ஆம் ஆண்டுக்குள் சிறப்பு மையம் முழுமையாக செயல்படும்.
*ஒரு கால்பந்து மெகா பூங்காவிற்கான திட்டமிடல் 2026 ஆம் ஆண்டிற்குள் செய்யப்படும் மற்றும் 2047 ஆம் ஆண்டிற்குள் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் 13 FIFA தரத்திலான ஸ்டேடியங்கள் மற்றும் 12 ஸ்மார்ட் ஸ்டேடியங்கள் நிச்சயம் இருக்கும்.
*AIFF கால்பந்தில் முழுமையான டிஜிட்டல் மேலாண்மைக்கு செல்ல திட்டமிட்டுள்ளது. ரசிகர்களை இணைத்து, சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருவாய் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "இந்தியாவில் கால்பந்தாட்டத்திற்கான மெட்டாவர்ஸ் போன்ற ஒன்றை நாங்கள் திட்டமிடலாம். நாங்கள் ஏற்கனவே கத்தாரில் FIFA+ ஐப் பார்த்துள்ளோம், மேலும் கால்பந்தின் முழுமையான டிஜிட்டல் மாற்றத்தைச் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,” என்று ஷாஜி பிரபாகரன் கூறினார்.
*இந்தியாவில் கால்பந்தாட்டத்திற்கு அதிக ஈர்ப்பை ஏற்படுத்த தேசிய கால்பந்து விளையாட்டுகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடங்கப்படும்.
*லீக் கட்டமைப்புகள் மாற்றப்படும். ஃபுட்சல் மற்றும் ஈஃபுட்பால் ஆகியவற்றில் முதன்மையான கவனம் செலுத்தப்படும்.
* ”தேசிய அணி” 2026 இல் ஆசியாவில் முதல் 10 இடங்களைப் பெற இலக்கு.
*"2026 ஆம் ஆண்டு U17 உலகக் கோப்பைக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டிலும் நாங்கள் தகுதி பெற விரும்புகிறோம். 2036ஆம் ஆண்டுக்குள் ஆசியாவின் முதல் 7 அணிகளில் ஒன்றாக வருவதை இலக்காகக் கொண்டுள்ளோம்,” என்றார் ஷாஜி பிரபாகரன்.
” இறுதியாக ஷாஜி பிரபாகரன் கூறுகையில், "2047ல், ஆசியாவின் முதல் 4வது இடத்தைப் பிடிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.