விளையாட்டு

“இந்தியா பலத்துடன் வருமென்று தெரியும்” - நியூஸி. கேப்டன்

“இந்தியா பலத்துடன் வருமென்று தெரியும்” - நியூஸி. கேப்டன்

webteam

இந்தியா இன்று பலத்துடன் விளையாட வந்ததை முன்பே கணித்ததாக நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் தெரிவித்தார்.

இந்தியா - நியூஸிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெற்றது. ஏற்கெனவே தொடர் 1-1 என்று சமநிலையில் இருந்ததால், இன்றைய போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான கோலின் முன்ரோ 72 (40), டிம் செய்ஃபெர்ட் 43 (25) ரன்கள் குவித்தனர். 

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 மட்டுமே எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடித் தோற்றது.  இந்திய அணியில் இளம் வீரர் விஜய் சங்கர் 43 (28), ரோகித் ஷர்மா 38 (32) ரன்கள் குவித்தனர். 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று நியூஸிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.

போட்டியின் வெற்றி தொடர்பாக பேசிய நியூஸிலாந்து அணி கேட்பன் வில்லியம்சன், “டி20 கிரிக்கெட்டிற்கு என்ன ஒரு விளம்பரம். இன்று நடந்தது ஒரு சிறந்த ஆட்டமாகும். இது குறுகிய தொடர் ஆகும். முதல் போட்டியில் நாங்கள் சிறப்பாக ஆடினோம். இரண்டாவது போட்டியில் சிலவற்றை கற்றுக்கொண்டோம். மூன்றாவது போட்டியில் இந்தியா பலத்துடன் வரும் என்று எங்களுக்கு தெரியும். கடைசி இரண்டு பந்துகள் வரையிலும் இந்தப் போட்டி முடிவில்லாமல் சென்றது. இந்தத் தொடரின் சிறந்த போட்டி இதுதான்” என்றார்.