விளையாட்டு

‘அணியில் மூன்று பவர் ஹிட்டர்கள் இருப்பது எங்களுக்கு சாதகம்‘-ரோகித் ஷர்மா 

‘அணியில் மூன்று பவர் ஹிட்டர்கள் இருப்பது எங்களுக்கு சாதகம்‘-ரோகித் ஷர்மா 

EllusamyKarthik

பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி என சொல்லப்படும் ஷார்ஜா மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான லீக் ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து 208 ரன்களை குவித்தது மும்பை அணி. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் டிகாக்கை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற, அணியின் ஸ்கோரை மளமளவென ஏற்றி மாஸ் காட்டினர் பின்வரிசையில் களம் இறங்கிய பாண்டியா சகோதரர்கள் மற்றும் பொல்லார்ட்.

“மும்பை அணியில் மூன்று பவர் ஹிட்டர்கள் இருப்பது எங்களுக்கு சாதகம். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை பொறுத்தே இந்த ஆட்டத்தின் போக்கு அமைந்திருந்தது.

அதை ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் மற்றும் குருனால் பாண்டியா சிறப்பாக செயல்பட்டனர். 

அதிலும் குருனால் பாண்டியா இந்த சீஸனில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத சூழலில் நான்கே பந்துகளில் 20 ரன்களை குவித்தது ஆட்டத்தில் பெரிய தக்காதை ஏற்படுத்தியது. மூன்று பேரும் நல்ல ஃபார்மில் இருப்பதும் எங்களுக்கு பிளஸ் தான்” என போட்டிக்கு பின் தெரிவித்துள்ளார் மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா.