விளையாட்டு

“ப்ளே ஆஃப் பற்றி நாங்கள் எதுவும் நினைக்கவில்லை” - குருனல் பாண்ட்யா

“ப்ளே ஆஃப் பற்றி நாங்கள் எதுவும் நினைக்கவில்லை” - குருனல் பாண்ட்யா

webteam

ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பெறுவது பற்றியோ அல்லது வேறு எதைப்பற்றியோ தங்கள் அணி நினைக்கவில்லை என மும்பை அணி வீரர் குருனல் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே நடைபெறுகிறது. ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. ஆனால் அதற்கு அடுத்தபடியாக எந்த இரண்டு அணிகள் இடம்பெறும் என்ற போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில் தான் புள்ளிகள் பட்டியலில் 3 மற்றும் 4ஆம் இடத்தில் இருக்கும் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் மும்பை வென்றால் ப்ளே சுற்றில் இடம்பெறும். ஹைதராபாத் வென்றால் அதன் வாய்ப்பு பிரகாசமாகி மும்பையின் வாய்ப்பு குறையும். எனவே மும்பையில் இன்று நடைபெறும் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தப் போட்டி தொடர்பாக பேசிய மும்பை அணியின் ஆல்ரவுண்டர் குருனல் பாண்ட்யா, “நாங்கள் ப்ளே ஆஃபில் பற்றியும் அல்லது வேறு எதைப்பற்றியும் நினைக்கவில்லை. நாங்கள் அடுத்த இரண்டு போட்டிகளில் கவனம் செலுத்த நினைக்கிறோம், அவை லீக் போட்டிகள்தான். அந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்று மட்டுமே திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.