விளையாட்டு

“தோனிக்கு காய்ச்சல் வந்ததும் சிஎஸ்கே சோர்வானது”- சென்னை பயிற்சியாளர் ஃபிளமிங்

“தோனிக்கு காய்ச்சல் வந்ததும் சிஎஸ்கே சோர்வானது”- சென்னை பயிற்சியாளர் ஃபிளமிங்

webteam

தோனிக்கு காய்ச்சல் வந்தபோது சென்னை அணி நம்பிக்கை குறைந்து சோர்வானதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறுகிறது. சென்னை அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அத்துடன் விளையாடியுள்ள 13 போட்டிகளில் 9 போட்டிகளை வென்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் பரிதாப நிலையில் உள்ளது. 

சென்னை ஒன்பது போட்டிகளில் வென்றிருந்த போதிலும், மும்பையிடம் மோதிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. அதேசமயம் மும்பைக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் சென்னை கேப்டன் தோனி காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. இது ரசிகர்கள் உட்பட சென்னை அணியினரையும் சற்று சலிப்படைய செய்தது. ஆனால் டெல்லிக்கு எதிரான அடுத்த போட்டியில் தோனி களமிறங்கிய தோனி 22 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். அத்துடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். 

இந்நிலையில் தோனி காய்ச்சலில் சிக்கியது தொடர்பாக பேசியுள்ள சென்னையின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங், “கடந்த வாரம் தோனி காய்ச்சலில் இருந்தபோது சென்னையும் சோர்வானது. அவருக்கு ஓய்வு எடுக்க வேண்டியிருந்தது. அவர் மீண்டும் நலமுடன் வருவார் என நினைத்தேன். அவருடன் பேசிய போது சிறப்பாக திரும்புவார் எனத் தோன்றியது. அவர் சிறிய காய்ச்சலால் தான் பாதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களிலேயே அவருடம் நலமாக அணிக்கு திரும்பினார்” என்று கூறினார்.