விளையாட்டு

“நான் இவ்வளவு (ரன்ஸ்) அடிப்பேன் என நினைக்கவில்லை” - கோல்டர் நைல்

“நான் இவ்வளவு (ரன்ஸ்) அடிப்பேன் என நினைக்கவில்லை” - கோல்டர் நைல்

webteam

தான் இத்தனை ரன்கள் எடுப்பேன் என நினைக்கவில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் கோல்டர் நைல் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியை 15 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று ஆஸ்திரேலியா வென்றது. இந்தப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கோல்டர் நைல் 60 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். அதற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

விருது பெற்ற பின்னர் பேசிய நைல், “நான் இவ்வளவு அடிப்பேன் என நினைக்கவில்லை. பயிற்சியின் போது ஸ்மித் 81 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் நான் எதுவும் அடிக்கவில்லை. அதனால் நான் ஸ்மித் உடன் சிறிது நேரம் களத்தில் நிற்க நினைத்தேன். நான் அடித்த இரண்டாவது பந்து மேலே சென்றது. ஆனால் நல்ல வேளையாக அது கேட்சாக ஆகவில்லை. அதுபோன்று சில பந்துகள் இருந்தது. சில பந்துகள் எட்ஜில் பட்டு சென்றது. இப்படி எனது பேட்டிங் சென்றது.

நாங்கள் மீண்டும் எங்கள் நிலைக்கு திரும்பியுள்ளோம். எங்கள் அணியில் இரண்டு உலக தரம் வாய்ந்த பவுலர்கள் இருக்கிறார்கள். எனவே நாங்கள் யாரை எதிர்த்து வெற்றி பெறுவோம். மிட்ஜெல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அவரை மீண்டும் அணிக்கு கொண்டு வந்தது ஃபின்ச் எடுத்த நல்ல முடிவு. ஸ்டார்க் ஒரு பிரமாதமான பவுலர் என்பதால் அனைத்து பாராட்டுக்களும் அவரை சேரும். பட் கம்மின்ஸும் சிறப்பாக பவுலர்” என்று கூறினார்.