விளையாட்டு

அல்சாரி ஜோசப்பின் முன்னேற்றம் என்ன ? - இஷான் கிஷன் பேட்டி

அல்சாரி ஜோசப்பின் முன்னேற்றம் என்ன ? - இஷான் கிஷன் பேட்டி

webteam

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் தான் கண்ட அல்சாரி ஜோசப்பிற்கு தற்போதுள்ளவர்கள் நிறைய மாற்றங்கள் இருப்பதாக மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 24வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறவுள்ளது மும்பையிலுள்ள மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள இந்தப் போட்டியில், சொந்த மண் என்பதால் மும்பை சற்று வலுவுடன் இருக்கும் எனப்படுகிறது. புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் 4 போட்டிகளை வென்று 3வது இடத்தில் உள்ளது. மும்பை அணி 5 போட்டிகளில் 3 போட்டிகளை வென்று 5 ஆம் இடத்தில் உள்ளது. எனவே இந்தப் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டயலில் முந்த வேண்டும் என இரண்டு அணிகளும் முனைப்புடன் உள்ளன.

மும்பை அணியில் ஹைதராபாத்திற்கு எதிரான கடந்த போட்டியின் போது சேர்க்கப்பட்ட புதுமுகமான அல்சாரி ஜோசப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அன்றைய தினம் அவரது பேச்சுதான் கிரிக்கெட் வட்டாரங்களில் வலம் வந்தன. 22 வயது மட்டுமே நிரம்பிய அல்சாரி ஜோசப் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் இன்றைய போட்டியிலும் ஜோசப் அசத்துவரா? என்று எதிர்ப்பார்ப்புகள் எழுந்தன.

இதற்கிடையே ஜோசப் தொடர்பாக பேசிய மும்பையின் இளம் வீரர் இஷான் கிஷான், “நான் 19 வயதுக்குட்பவர்களுக்கான போட்டியில் பார்த்ததைவிட ஜோசப் இப்போது நன்றாக முன்னேற்றம் அடைந்துவிட்டார். அவரது பந்துவீச்சின் வரிசையும், வேகமும் நன்றாக முன்னேறியுள்ளது. அவர் பேட்ஸ்மேன்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு முன்னேற்றிவிட்டார் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.