வராஹி அம்மன் சந்தன அலங்காரம் சுகந்தி
கோயில்கள்

போருக்கு செல்லும் முன்.. தஞ்சை பெரியகோவிலில் வாராகி அம்மனை ராஜ ராஜ சோழன் வணங்கியது ஏன் தெரியுமா?

ஆஷாட நவராத்தி காலம் என்பது ஆனி மாதம் தொடங்கும் அம்மாவாசை முதல் நவமி வரை கொண்டாடப்படும் ஒரு வைபவம். இந்த வைபவமானது வராஹி தேவிக்கு உரியதாகும் .

Jayashree A

ஆஷாட நவராத்தி காலம் என்பது ஆனி மாதம் தொடங்கும் அம்மாவாசை முதல் நவமி வரை கொண்டாடப்படும் ஒரு வைபவம். இந்த வைபவமானது வராஹி தேவிக்கு உரியதாகும் . இந்த வராகி அம்மன் அதீத சக்திக்கொண்டவள். வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். ஸப்த கன்னிகைகளுள் ஒருவர்; ராஜராஜேஸ்வரிக்கு சேனாதிபதியைப்போல் செயல்படுபவள்.

ராஜ ராஜேஸ்வரியின் முக்கிய தஞ்சை பெரிய கோவில் என்ற வரலாற்று சிறப்புமிக்க திருத்தலத்தை ராஜ ராஜ சோழன் கட்டிமுடிக்க இந்த வராஹி அம்மன் உதவினார் என்று வரலாறு கூறுகிறது. ராஜ ராஜ சோழன் வராஹி அம்மனின் மிகப்பெரிய பக்தர். அதன் காரணமாத்தான் வராஹி அம்மனுக்காக தஞ்சை அரண்மனையில் சன்னதி அமைத்துள்ளார். இவளை வணங்கி வந்தால், எதிரிகள் இருக்கமாட்டார்கள் என்றும் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஆஷாட நவராத்தி நடந்துக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் தஞ்சையை ஆண்ட ராஜராஜனால் கட்டப்பட்ட வராகி அம்மனுக்கு நடத்தப்பட்ட அலங்காரங்களில் ஒருசில உங்களின் பார்வைக்காக...

வராஹி அம்மன் மாதுளை அலங்காரம்
வராஹி குங்கும அலங்காரம்

வராகியை வணங்கி அவளின் அருள் கிடைக்கப்பெருவோம்...