காழியூர் நாராயணன் PT
ஆன்மீகம்

குருபெயர்ச்சி பலன்கள்: எந்தெந்த ராசிக்கு என்ன கிடைக்கும்?.. கேள்விகளுக்கு காழியூர் நாராயணன் விளக்கம்

திருகணித பஞ்சாங்கமானது கோள்களின் சுழற்சியின் மாற்றத்தைக்கொண்டு பஞ்சாங்கத்தில் சில திருத்தத்தை மேற்கொண்டு எழுதப்பட்டது. திருகணித பஞ்சாங்கத்திற்கும் வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் அதிக வேறுபாடு இல்லை.

Jayashree A

இன்று நடைபெறும் குருபெயர்ச்சி யார், யாருக்கு எத்தகைய பலன்களை தரும்? என்பது குறித்து புதிய தலைமுறையின் நேரலையில் காழியூர் நாராயணன் அவர்களிடம் நேயர்கள் கலந்துரையாடியது..

குரு பெயர்ச்சி என்றால் என்ன?

நவ கிரகங்களில் முக்கியமானது குரு. குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவர். ஒவ்வொரு கிரகமானது அதனது சுழலும் பாதையையும் நேரத்தைக் கொண்டு அதன் இருப்பிடத்தை கணக்கிடுவர். இப்படி கிரகங்களின் சுழற்சியானது, அதன் சக்தியானது ஒவ்வொருவித பலன்களை தரும் என்று ஆரியபட்டா போன்ற வானியல் விஞ்ஞானிகள் கணித்து கூறுகின்றனர். அந்த முறைப்படி இந்த ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு சுழற்சிக்கும் என்னென்ன பலாபலன்கள் கிடைக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வது தான் ஜோதிடம். ஜோதிடம் ஆன்மீகத்துடன் இணைந்தது.

வாக்கிய பஞ்சாங்கம் - திருகணித பஞ்சாங்கம்.. இதன் வேறுபாடு என்ன?

திருகணித பஞ்சாங்கமானது கோள்களின் சுழற்சியின் மாற்றத்தைக்கொண்டு பஞ்சாங்கத்தில் சில திருத்தத்தை மேற்கொண்டு எழுதப்பட்டது. திருகணித பஞ்சாங்கத்திற்கும் வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், அதிக வேறுபாடு இல்லை. ஆனாலும், கோவில்களில் சனிப்பெயர்ச்சி குருபெயர்ச்சி போன்றவை வாக்கிய பஞ்சாங்கத்தைக் கொண்டுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குருபெயர்சி, சனிபெயர்ச்சி எதற்கு வலிமை அதிகம்?

சனி பெயர்ச்சி என்றால் மக்கள் மனதில் ஒரு பயம் இருக்கும். சனி போல் கொடுப்பாரும் இல்லை; சனி போல் கெடுப்பாரும் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது சனி அப்பாவைப்போல் குரு அம்மாவைப்போல் அப்பாவிடம் ஒரு பயமும் பாசமும் இருக்கும். அம்மாவிடம் பாசம் மட்டுமே இருக்கும்.

இராவணன் 9 கிரகங்களையும் தனக்கு அடிமையாக்கி, அவர்களை படிகளாக பயன்படுத்தி ஏறி சென்று வந்தானாம். இதைக்கண்ட நாரதர், இராவணனிடம் “இராவணா... இவர்களை நிமிர்த்தி போட்டு நெஞ்சில் நடந்து செல்” என்றாராம். அதே போல் இராவணனும் 9 கிரகங்களையும் நிமிர்த்து போட்டு நடக்க ஆரம்பித்தான். சனியின் நேர் பார்வையானது அவன் மேல் பட்டதும் அவனது அழிவுகாலம் ஆரம்பமானது என்று புராணாத்தில் ஒரு கதை உண்டு. அதே போல் சனியின் பார்வையானது ஒருவருக்கு அதீத நன்மையை கொடுக்கும் .

குருபெயர்ச்சி பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட வீடியோவை பாருங்கள்.