தேவாலயம் விக்கிபீடியா
ஆன்மீகம்

“கிறிஸ்துவின் ஒளி இதோ.. ஆமென்” - அனைத்து தேவாலயங்களிலும் நாளை ஈஸ்டர் விழா கொண்டாட்டம்!

கிருத்தவர்களின் புனிதவெள்ளியை அடுத்து இயேசுகிருஸ்து உயிர்தெழும் நிகழ்வாக இன்று இரவு ஈஸ்டர் கொண்டாட்டம் சிறப்பாக நடைப்பெற உள்ளது.

Jayashree A

நாளை கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைப்பெற இருக்கிறது. அதாவது பாஸ்கா பண்டிகை. இந்த ஈஸ்டர் பண்டிகையில் நம்மிடம் உள்ள பாவங்கள் கலையப்பட்டு புதுப்பிறப்பு உண்டாவதைக் குறிக்கும் வகையில் இப்பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் முட்டைகளை அனைத்து விலங்குகளுக்கும் உணவாக வழங்குவது வழக்கத்தில் உள்ளது.

கிறிஸ்தவர்களின் புனிதவெள்ளியை அடுத்து இயேசு கிறிஸ்து உயிர்தெழும் நிகழ்வாக இன்று இரவு ஈஸ்டர் கொண்டாட்டம் சிறப்பாக நடைப்பெற உள்ளது.

இந்நிகழ்சியானது அனைத்து கிறிஸ்துவ ஆலயங்களில் நடைப்பெற உள்ளது. கிறிஸ்தவர்களின் இத்தகைய தவக்காலமானது கடந்தமாதம் தொடங்கப்பட்ட நிலையில், குருத்தோலை பவனியும் அதைத்தொடர்ந்து பாதம் கழுவும் நிகழ்சியும் நடந்து முடிந்த நிலையில், நேற்று புனிதவெள்ளி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இயேசு உயிர்தெழும் தினமான நாளை ஈஸ்டர் நிகழ்வு கொண்டாடப்பட உள்ளது.

முன்னதாக இன்று இரவு அனைத்து தேவாலயங்களிலும் பாஸ்கா மெழுகுவர்த்தியில், அருட்தந்தை அலங்கரிக்கப்பட்ட சிலுவையால், “அகரமும் நகரமும் காலங்களும் அவருடையன, யுகங்களும் அவருடையன” என வரைந்தபின், இயேசுவின் காயங்கள் பதிவுசெய்யப்படும். அதன்பிறகு அம்மெழுகுவர்த்தியானது அருட்தந்தையால் ஒளியேற்றப்படும்.

இந்நிகழ்சியை கிறிஸ்தவர்கள் ஏசு உயிர்தெழுந்ததாக கொண்டாடுவார்கள். பிறகு மக்கள் ஆலயத்தில் பவனி வருவார்கள். ஆலய வாசலில் அருட்தந்தை “கிறிஸ்துவின் ஒளி இதோ” என்று பாடுவார்கள்.

அப்பொழுது மக்கள் அனைவரும் மெழுகினை ஏற்றுவர். அச்சமயம் ஆலயங்கள் சுடர்விட்டு காட்சி தரும். இந்நிகழ்சியைத் தொடர்ந்து, வழிபாடு ஆரம்பமாகும். இவ்வழிபாட்டில், அருட்தந்தை நூலிலிருந்து சில வாசகத்தை வாசிப்பார். அதை அங்கு இருப்பவர்கள் ”ஆமென்” என்ற பதிலுடன் அமைதியாக அதை கேட்டபடி இருப்பர். இதைத்தொடந்து திருமுழுக்கு வழிபாடு, புனிதர்களின் மன்றாட்டு மாலை, ஜபிக்கப்பட்ட தண்ணீர் தெளிக்கப்பட்டு அனைவருக்கும் ஆசி வழங்கும் நிகழ்சி நடைபெறும். அதைத்தொடர்ந்து மன்றாடு வழிபாடுகள் பாஸ்கா முகவுரை ஆகியவற்றுடன் ஈஸ்டர் விழா முடிவடையும்.