அபயாம்பிகை மாயவரம் NGMPC22 - 168
ஆன்மீகம்

ஆடிப்பூரம்.. மயிலாடுதுறை அபயாம்பிகை அம்பாள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு அனைத்து அம்பாள் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

Jayashree A

ஆடிப்பூரத்தினை முன்னிட்டு, மயிலாடுதுறை அபயாம்பிகை சந்நதியில், மங்கள பொருட்களை வைத்து அம்மனுக்கு படையலிட்டு, சிறப்பு வழிபாடு, ஆடிப்பூர அம்மனுக்கு 5008 வளையல்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சமயக்குரவர்களால் பாடல்பெற்ற மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில், அபயாம்பிகை அம்பாளுக்கு ஆடிப்பூத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, முறத்தில், கண்ணாடி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, வளையல் ஆகிய மங்கள பொருட்களை வைத்து படையலிட்டு அம்மனுக்கு பூரம் கழிக்கும் வழிபாடு நடைபெற்றது.

அம்மனுக்கு மஹாதீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆடிப்பூர அம்மனுக்கு 5008 வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு முறத்தில் ரவிக்கை துண்டு கண்ணாடி சீப்பு வளையல்கள் ஆகியவை வைத்து பிரசாதம் வழங்கப்பட்டது.