sai sudharsan Pt web
Cricket

”இவங்ககிட்ட நிறைய கத்துக்கணும்” - ஆழ்வார் பேட்டை to அகமதாபாத்.. அனுபவங்களை பகிர்ந்த சாய் சுதர்சன்!

IPL, TNPL இதெல்லாம் சாய் சுதர்சனுக்கு கற்றுக்கொடுத்தது என்ன?... இதில் அவர் கற்றுக்கொண்டது என்ன?

Jayashree A

IPL தொடரின் இறுதிப்போட்டியில் 96 ரன்குவித்து ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சாய் சுதர்சன். ஆழ்வார் பேட்டை முதல் அகமதாபாத் வரை சென்று வந்திருக்கும் இவரது கிரிக்கெட் அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்துக்கொண்டார். இதோ.. அவருடனான ஒரு நேர்கானல்..

ஜூனியர் சூப்பர் கிங்க்ஸ் அகாடமியிலிருந்து இப்பொழுது குஜராத் டைட்டன்ஸ் வரை ஒரு IPL வின் பண்ணி இருக்கிறீர்கள், TNPL வின் பண்ணி இருக்கிறீர்கள். இந்த பயணத்தை நீங்கள் எப்படி பார்கறீர்கள்?

எனக்கு இது நிச்சயமா சந்தோஷமா இருக்கு. கடைசி இரண்டு வருடம் புது புது டோர்னமெண்ட்ஸ் நிறைய விளையாடி இருக்கிறேன். விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

சாய் சுதர்சன் T20 ப்ளேயர் என்று எல்லோரும் எதிர்பார்க்கும் நேரத்தில் இந்த உள்ளூர் விளையாட்டு எவ்வாறு முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

உள்ளூர் விளையாட்டுதான் எனக்கு தைரியத்தை தந்தது. இதன் மூலம் எப்படி அடாப் பண்ணலாம் என்பதை கற்றுக்கொண்டேன்.

ரஞ்சி கோப்பைக்கு நீங்க எப்படி ஒர்க் பண்ணிட்டு இருக்கீங்க?

நான் பவுலரிடமிருந்து அதிகமாக கற்றுக்கொள்கிறேன். ஸ்பின்னர்ஸ் இடம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

TNPL உங்க செயல்திறனை எப்படி உயர்த்துகிறது? TNPL க்கும் IPL க்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. TNPL ல் நிறைய கற்றுக்கொண்டேன். அழுத்தத்தை எப்படி எதிர்நோக்குவது என்பதை தெரிந்துக்கொண்டேன்.

IPL ஆடணும், ரஞ்சித் கோப்பை ஆடணும் பிறகு இந்தியா ஆடணும் என்று சிறுவயது முதல் எல்லோருக்குள்ளும் ஒரு ஆசை இருக்கும். முதல் இரண்டு சுற்று எனக்கு மிகவும் பதற்றமாக தான் இருந்தது.

இவ்வாறு தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் சாய் சுதர்சன். மேலும் அவர் பகிர்ந்த பல விஷயங்களை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.