ரஷ்யா - உக்ரைன்

உலக நாடுகளின் பொருளாதார தடை - ரஷ்யாவில் உணவுப்பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடு

உலக நாடுகளின் பொருளாதார தடை - ரஷ்யாவில் உணவுப்பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடு

Veeramani

உக்ரைன் மீதான போர் காரணமாக மேற்கத்திய நாடுகளின் நிதி மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யாவில் உள்ள சில்லறை விற்பனையாளர்களின் உணவுப்பொருள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கருப்புச் சந்தை வணிகத்தை கட்டுப்படுத்தவும், மலிவு விலையை உறுதிப்படுத்தவும் நாட்டிலுள்ள சில்லறை விற்பனையாளர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்பனையை மட்டுப்படுத்துவார்கள் என்று அரசு தெரிவித்தது.

இது தொடர்பாக ரஷ்யாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் நுகர்வுக்குத் தேவையானது மற்றும் அடுத்தடுத்த மறுவிற்பனைக்குத் தேவையான அளவை விட அதிக அளவிலான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பு உள்ளது. ஆயினும் சில்லறை விற்பனையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள் தனிநபர்களுக்கு விற்கப்படும் குறிப்பிட்ட பொருட்களின் அளவைக் கட்டுப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொட்டி, அரிசி, மாவு, முட்டை,தேர்ந்தெடுக்கப்பட்ட இறைச்சிகள் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அரசின் இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 24 அன்று உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தொடங்கியபின்னர், அமெரிக்க, கனடா, ஜப்பான் மற்றும் பல மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்தது.